தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றமா? நடந்தது என்ன பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த தகவல் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறையின் தலைமைப் பதவிக்கான அதிகாரியை தேர்வு செய்ய, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியலை பரிசீலித்தது. அதனடிப்படையில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 தகுதியான மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இறுதி பட்டியலாக மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது.

அந்த பட்டியலில் இருந்து, ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். அதில் கடைசியாக மகேஷ் குமார் அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மகேஷ்குமார் அகர்வால் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது.

மகேஷ்குமார் அகர்வாலை, நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், முதல்வர் விஜய், தலைமைச் செயலகம் வர மாட்டார். இதனால் திங்கட்கிழமைக்கு பிறகுதான் சட்டம் -ஒழங்கு டிஜிபி நியமனம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: