கடவுள் முன்பு அனைவரும் சமம் தானே கோயில்களில் விஐபி தரிசனம் எதற்கு?: உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.ஜெகநாத் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி.பாலசுப்ரமணியம், கூட்ட நெரிசலை சமாளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றார். மனுவுக்கு 6 வாரங்களில் அறநிலையத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: