மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருது: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அறிவிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, முதல்வரால் மாநில விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் விருதாளர்கள், https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 25.6.2026க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 25.6.2026 அன்று மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதலமைச்சரால் மாநில விருதுகள் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: