சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வுக்குழு அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் குறித்து கள ஆய்­வுக்­குழு அறிக்கை அளிக்க கால அவகாசத்தை நீட்டித்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் மடிவுகள் குறித்து ஆராய 38 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அந்த குழு தொகுதி வாரியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அனைத்­து­மட்ட நிர்­வா­கி­களை நேர­டி­யாக சந்­தித்து பேசி வருகிறது. அவர்களின் கருத்துக்களையும், அவர்­க­ளின் பரிந்­து­ரை­க­ளை­யும் பெற்று வருகிறது.

மேலும் திமுகவினர் தங்கள் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்வதற்காக ‘‘உடன் பிறப்பின் குரல்” என்ற பெயரில் இணையதளத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதிலும் அனைவரும் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இணையதளம் வாயிலாக இதுவரை 4.60 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கள ஆய்வு குழுவினரின் அறிக்கையை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலை­வர் மு.க. ஸ்டாலின் அறி­விப்­பிற்­கி­ணங்க நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் குறித்து “கள ஆய்வு” செய்­வ­தற்­காக 38 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டது.

இக்­கு­ழு­வா­னது, மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதி வாரி­யாக சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு அனைத்­து­மட்ட திமுக நிர்வாகிகளை நேர­டி­யாக சந்­தித்து கருத்­து­க­ளை­யும்- அவர்­க­ளின் பரிந்­து­ரை­க­ளை­யும் பெற்று கள ஆய்வு அறிக்­கையை ஜூன் 5ம் தேதிக்­குள் திமுக தலை­வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்­பிக்க வேண்­டும் என அறிவிருத்திருந்தோம். தற்­போது ஆய்­வுக்­கு­ழு­வி­னர் தலை­வர் மு.க.ஸ்டாலினிடம் கால­அ­வ­கா­சத்தை நீட்டிக்க வேண்­டும் என்று கோரி­ய­தின் அடிப்­ப­டை­யில் வரும் ஜூன் 10ம் தேதி கள ஆய்வு அறிக்­கை­யினை சமர்ப்­பிக்க கால அவ­கா­சம் நீட்­டிக்­கப்­ப­டு­கி­றது.

Related Stories: