சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ தலைமையில் வரும் 31ம் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
