பிசினஸ் மீட்டிங்கா, பர்சனல் மீட்டிங்கா? அமைச்சர் ஆதவை காண அட்வான்ஸ் புக்: உதவியாளர்களால் விரட்டியடிக்கப்படும் சாமானியர்கள்

* மல்டி-மில்லினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; கேலிக்கூத்தாகும் தலைமைச்செயலகம்

சென்னை: பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனாவை காண இரண்டு நாட்களுக்கு முன்பே அட்வான்ஸ் புக் செய்ய வேண்டும் என கூறி அவரது உதவியாளர்களால் சாமானியர்களை விரட்டியடிக்கும் அவலம் தலைமைச்செயலகத்தில் நடந்தேறி வருகிறது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற போது ‘‘இங்கே ஒரே பவர் சென்டர் தான், அது என் தலைமையில் உருவான சென்டர் தான்’’ என மிகக்காட்டமாக பேசி அதிகார மையங்கள் எதற்கும் இடமில்லை என அறைகூவல் விடுத்திருந்தார்.

ஆனால், ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் நான்தான் பவர் சென்டர் என்பதை எடுத்துரைக்கும் வகையில் தினம் தினம் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா செயல்பாடுகள் உள்ளன. இதனால் தவெக தொண்டர்கள் மத்தியில் ஆதவ் மீது கடும் அதிருப்தி அலை எழுதுள்ளன. குறிப்பாக, அரசு நிர்வாகத்தில் தலையீடு, கட்சியின் கொள்கைகள் மற்றும் முக்கியத் துறை சார்ந்த விஷயங்களில் முதல்வர் விஜய்யின் ஒப்புதல் இன்றி அவர் தன்னிச்சையாக பேட்டி அளிப்பது போன்றவை கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்குகிறது.

இதனை விமர்சனம் செய்யும் வகையில் முதல் போட்டவர் (முதலீடு போட்டவர்) பேசுகிறார்; முதலமைச்சர் பேசுவதில்லை என அரசியல் களத்தில் தற்போது பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இதனால் விஜய் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவை மட்டுமின்றி தலைமைச்செயலகத்தில் கட்சி அலுவலகமாக பயன்படுத்தி மாற்றுக் கட்சியினரை இணைக்கும் படலத்தை அரங்கேற்றி வரும் ஆதவ் அர்ஜுனாவில் செயல் அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ரியல் பவர் சென்டராக வலம் வரும் அமைச்சர் ஆதவை காண தினசரி தலைமைச்செயலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரும் நிலையில் வரக்கூடியவர்கள் சாமானியர்களின் குறைகளை கூறி அமைச்சர் நிச்சயம் மனுவை வாங்கி படித்து விட்டு அதற்கு ஏற்ற தீர்வை காண்பார் என வருவோரின் எண்ணங்கள் சுக்குநூறாக உடைக்கும் வகையில் அவர்களது உதவியார்களின் செயல் உள்ளது. மனுவை அமைச்சரிடம் கொடுக்க முடியாது; எங்களிடம் கொடுங்கள் கொடுத்து விடுகிறோம் என கூறி வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.

அமைச்சர் ரொம்ப பிசி அவரை பார்க்க முடியாது என திருப்பி அனுப்பும் நிலைக்கு சாமானியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தொழிலதிபர்கள், மல்டி மில்லினர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது தான் வேதனையின் உச்சம். இதுவரை இருந்த அதிமுக – திமுக அமைச்சர்கள் வரக்கூடிய மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி ஆணையிடுவர்.

ஆனால் அமைச்சர் ஆதவை காண கார்பரேட் கம்பெனி நடத்துவதை போல அட்வான்ஸ் அபாயிண்மென்ட் இரண்டு நாட்களுக்கு முன்பே வாங்க வேண்டும் என்றும், அதிலும் பிசினஸ் மீட்டிங்கா, பர்சனல் மீட்டிங்கா என குறிப்பிட வேண்டும் என கூறுவது வேதனையின் உச்சம். தற்போது வரை தவெகவின் கட்சி அலுவலகமாக இருந்து வரும் தலைமைச்செயலகம் இப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் தொழில் வர்த்தக ஸ்தலமாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

* சட்டையில்லாமல் வந்தவருக்கு அமைச்சரின் சிறப்பு தரிசனம்
தவெகவியின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வென்று அமைச்சரான ரமேஷ் தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்துவருகிறார். மிக இளம் வயது அமைச்சராக இருந்து வரும் இவரிடம் மனு அளிக்க மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பார்வையாளர்கள் அனுமதி நேரம் என குறிப்பிடப்பட்டு அவரது அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

இவரை காண தினசரி ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் நிலையில் வரக்கூடியவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், அதிகார பலம் பொருந்தியவர்கள், காஞ்சிபுரம் பெரியாவாக்களுக்கும், திருவரங்கத்தில் வரக்கூடியவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாதாரண கோயில் பூசாரிகளுக்கு அளிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாக பார்க்கப்படுகிறது.

அமைச்சரை காண காலை 11 மணிக்கு வந்த ஆர்.கே.நகரை சேர்ந்த கோயில் பூசாரி ஒருவர் 4 மணி நேரம் காத்திருந்தும் திருவரங்கத்தில் இருந்து வந்தவருக்கும் உடனடி அமைச்சரின் சிறப்பு தரிசனம் கிடைக்க அவரை சந்தித்து யாரையும் சந்திக்காமல் ஆலோசனை கூட்டம் என்று கூறி நலுவி சென்ற அமைச்சரின் செயல் எதிர்பாராமல் நடந்த ஒன்றா அல்லது அமைச்சர் கூறி மற்றவர்கள் உதவியாளர்களால் மறுக்கப்பட்டது ஏன் என்ற உண்மை நிலை அமைச்சருக்கு மட்டுமே வெளிச்சம். கடைசி வரை காவல் தெய்வங்கள் அமைச்சர் அறையில் காத்திருந்தது தான் மிச்சம்.

இதனை தான் பண்டை காலத்திலேயே ‘‘அமரவோர் அங்கம் ஆறும் வேதம்ஓர் நான்கும் ஓதி,தமர்களில் குலங்களாய தாதர்கள் நிலர்களாகில், எமர்களன்று அஞ்சி யெண்ணி இளப்பர்கள் போலும்’’ என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமலை பாசுரத்தின் அர்த்தம் யாதெனில் ‘‘அரசாங்க அந்தஸ்து, பெரிய வேத அறிவு, அல்லது உயர்ந்த ஜாதிப் பின்னணி கொண்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக சிலரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும்; பக்தி மட்டுமே கொண்டு எளிய நிலையில் இருக்கும் பூசாரிகளை/அடியவர்களைத் ”தங்கள் ஆட்கள் இல்லை” என்று உதாசீனப்படுத்துவதும் மிகப்பெரிய பாவம் என எடுத்துரைக்கிறது.

Related Stories: