சென்னை: சோபா மாடல் ஆட்சியிலபோலீசாலயும் பாதுகாப்பு இல்ல, போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: சென்னை கோடம்பாக்கத்துல் போலீஸ் உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, பாலியல் சீண்டலுக்குக்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
போலீஸ்கிட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் காவல்நிலையத்துக்கு ஓட வேண்டிய நிலையில் தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு. இதுமட்டுமல்ல, வேளச்சேரியில் நடைபயிற்சிக்கு போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு, கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி, இந்த சோபா மாடல் ஆட்சியில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல, போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க எம்எல்ஏக்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க காவல்துறையை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதல்வர் முயற்சி செய்யனும். இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
