66 வயது மாமனார்தான் என்னைய கர்ப்பமாக்கினார்: போலீஸ் நிலையத்தில் போட்டு கொடுத்த 26 வயது மருமகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கணவன் இறந்த நிலையில் யாரோ பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய 26 வயது மருமகளை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 66 வயது மாமனாரே கர்ப்பமாக்கியது போலீஸ் நிலையத்தில் அம்பலமானது. திருப்பத்தூர் தாலுகா உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(66). இவருக்கு 1 மகன், 4 மகள்கள்.

இவர்களில் மகன் சிங்காரவேலனுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் பிள்ளையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். கணவன் இறந்த பிறகு 3 பிள்ளைகளுடன் மாமனார் வீட்டில் 26 வயது மருமகள் வசித்து வந்தார். மகன் இறந்த பிறகு மருமகள் மீது மாமனாருக்கு தவறான எண்ணம் ஏற்பட்டது.

அவ்வப்போது தனது மருமகளிடம் சென்று, ‘உனக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கி தருகிறேன்’ என ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். இதில் மருமகள் கர்ப்பமானார். இதனையறிந்த மாமானார் ஆனந்தராஜ் அதிர்ச்சியடைந்தார். ‘உனது கர்ப்பத்திற்கு நான்தான் காரணம் என வெளியே சொல்லவேண்டாம்’ எனக்கூறியுள்ளார். இதனிடையே சில நாட்களுக்கு முன் மருமகள் கர்ப்பமடைந்த விவகாரம் வெளியே தெரிந்தது.

அப்போது தன்னை யாரோ பலாத்காரம் செய்துவிட்டனர் எனக்கூறினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளிக்க செய்தனர். அப்போது போலீசாரின் தீவிர விசாரணையில், தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை மருமகள் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தராஜை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: