வேலூர்: வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என மாமூல் கேட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் கொடுத்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காததால், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் மக்கள் 25ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தவெக நிர்வாகி விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம் கணியம்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விஜயகுமார் மற்றும் லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய 3 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம் உள்ளிட்டோர் தன்னை வழிமறித்து தாக்கியதாக விஜயகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் செங்கல் சூளை உரிமையாளர் சண்முகம், ரமேஷ், சுனில், தினகரன், சுமன் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
