சோழவந்தான்: சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா. தற்காலிக சபாநாயகராகவும் பணியாற்றியவர். அதிமுக தரப்பில் சீட்டு தராததால், கடைசி நேரத்தில் தவெகவில் இணைந்தார். மறுநாளே சோழவந்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி எம்எல்ஏ கருப்பையா, ஆலங்கொட்டாரத்தில் உள்ள கிணற்றில் மிதந்தபடி, ஜலப்பிரதட்சணம் என்ற நேர்த்திக்கடனை 10 நிமிடம் செலுத்தினார்.
தவெக ஆட்சி அமைக்க வேண்டுதல் நிறைவேறியதால் நேர்த்திக்கடன் செலுத்த வந்ததாக கூறினார். இவர் ஜெயலலிதா ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது ஜெ. பிறந்தநாள் விழா மற்றும் சிறையில் இருந்து அவரது விடுதலை பெறுவதற்காக ஜலப்பிரதட்சணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
