சுட்டெரிக்கும் வெயிலால் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குவியும் மக்கள்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் நீச்சல் குளத்திற்கு படையெடுத்து, உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு வெயில் கடுமையாக அடித்து வருகிறது. கடந்த சில நாளாக 103.1 டிகிரி பாரன்ஹீட்டாக நிலவியது. வெயில் அதிகரித்ததன் காரணமாக, பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.

பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவிலும் வெப்பக்காற்று வீசுகிறது. வெயில் அதிகமாக நிலவுவதால் பகல் நேரத்தில் பொது வெளியில் மக்கள் நடமாட்டம் குறைந்து, இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. வெயிலை தணிக்க தர்மபுரி நகரில் உள்ள இளைஞர்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் பலரும், தர்மபுரி நீச்சல் குளத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதே போல், காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமாக நீச்சல் பழகியும், குளித்தும் மகிழ்ந்தனர்.

Related Stories: