சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
