சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட கோரி வழக்கு; இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, இந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
