குளித்தலை : குளித்தலை முசிறி பெரியார் பாலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அணுகு சாலை திறந்து விடப்பட்ட நிலையில் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம் குளித்தலையில் போக்குவரத்து வசதிக்காக குளித்தலை முசிறி பெரியார் பாலம் கட்டப்பட்டது.
இந்தப்பாலத்தின் வழியாக தினந்தோறும் பெங்களூர் கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், நாமக்கல், துறையூர், பெரம்பலூர், முசிறி மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்கள் பேருந்துகள் கரூர், திருச்சி பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுங்க கேட் வந்து சிறிய சாலை வழியாக இந்த புறவழிச் புறவழிச் சாலை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது.
அதேபோல் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, பஞ்சப்பட்டி, கடவூர், தோகமலை, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரியார் பாலத்தின் வழியாக சென்று வருகிறது.
அதேபோல் காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் முசிறிக்கோ மணப்பாறைக்கோ செல்ல வேண்டுமென்றால் வேறொரு மாற்று பாதையில் சென்று பாலத்தின் வழியாக செல்கிறது.
அதேபோல் கோயம்புத்தூர், காங்கேயம், ஈரோடு, கரூர் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் மணப்பாறைக்கோ பெட்டவாய்த்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் செல்ல வேண்டுமென்றால் சுற்றி வந்து தான் செல்ல வேண்டும். அதனால் ஒரு சில நேரங்களில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டு மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் இடம் பொதுமக்கள் புதிதாக குளித்தலை முசிறி, பெரியார் பாலத்தில் அணுகு சாலை அமைக்க வேண்டும் அப்படி அமைக்கப்பட்டால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பல மார்க்கத்தில் இருந்து வாகனங்கள் பிரிந்து விரைவாக தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்ல முடியும் அதனால் புதிதாக அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ மாணிக்கம், நெடுஞ்சாலைத்துறை மூலம் அணுகு சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இந்நிலையில் வெளியூர் வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் முசிறி கோ கரூருக்கோ செல்ல வேண்டும் எனறால் அணுகு சாலையில் நின்று கேட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதேபோல் கரூர் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும் முசிறிக்கோ திருச்சிக்கோ செல்ல வேண்டுமென்றால் கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
பகலில் அங்கு இருக்கும் மக்களிடம் கேட்டு சென்று விடுகின்றனர். இரவில் ஒரு சில நேரங்களில் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் குளித்தலை, முசிறி பெரியார் பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட அணுகு சாலை பிரிவு சாலையில் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
