திருவள்ளூர், ஏப்.14: திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15 நாட்கள் நடைபெறும் இலவச கோடைக்கால பயிற்சி முகாமில் மாணவ – மாணவிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு பிரிவில் 2026ம் ஆண்டிற்கான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 17 முதல் மே 1ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் தடகளம், மல்யுத்தம், கையுந்துபந்து, கபாடி மற்றும் உஷூ ஆகிய 5 விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு தடகளம் – லாவண்யா – 80729 08634, மல்யுத்தம் – சதிஷ் கண்ணா – 63828 44122, கைப்பந்து சுவேதா – 63740 15101, கபாடி அய்யனார் பாண்டி – 63745 26280, 99409 34271, உஷூ தீபன் – 99442 90515, என்ற எண்களில் விளையாட்டு பயிற்றுநர்களை தொடர்புக்கொண்டு, இந்த கோடைக்கால பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், இப்பயிற்சி முகாமானது முற்றிலும் இலவசமாக நடைபெற்று, பயிற்சியின் இறுதி நாளில் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆகவே, இலவச கோடைக்கால பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மாணவ – மாணவிகள் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
