திருவள்ளூர், ஏப்.11: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், புதுவள்ளூர் கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (53). இப்பெண், நேற்று முன்தினம் மகள் வைஷ்ணவி (23) என்பவருடன் ஸ்கூட்டியில் வேலையின் காரணமாக திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் பாப்பரம்பாக்கம் கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது, எதிரே வேகமாக வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுளாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பலத்த காயமடைந்த வைஷ்ணவியை, அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
