திருவள்ளூர், ஏப்.11: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது, மனைவி ரோஸ்மேரி (78). நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, தூக்க கலக்கத்தில் இருந்த மூதாட்டி ரோஸ்மேரி, கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த ரோஸ்மேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லூர்துசாமி, மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
