வில்லுப்பாட்டு, நாடகம் மூலம் விழிப்புணர்வு

திருவள்ளூர், ஏப்.8: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நசரத்பேட்டை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்து கல்லூரியில் வாக்களத்தலின் முக்கியத்துவம் மற்றும் 100% வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி ஓவியப்போட்டி, கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, நாடகம் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநர் கே.எஸ்.யுவராஜ் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர் மாரிச்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோ.மகேஷ்பாபு, கே.சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், உதவி பொறியாளர் முத்துலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் டில்லிராணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரளாதேவி, தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.சிவானந்தம், ஊராட்சி செயலர்கள் சரண்யா, திவ்யா, பாபு, எழில்குமார், சாந்தகுமார், மோகனலிங்கம், சுகாதார ஊக்குநர் மங்கையர்கரசி, முதல்வர் டாக்டர் சித்த ரன்ஜன்தாஸ், விரிவுரையாளர் டாக்டர் விஜயராஜா, கல்லூரி மாணவ – மாணவிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Related Stories: