பாபர் மசூதி கட்டும் சர்ச்சையில் சிக்கிய டிஎம்சி முன்னாள் எம்எல்ஏவுக்கு பாஜவுடன் தொடர்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹூமாயூன் கபீர். பரத்பூர் தொகுதி பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்ததை போன்று மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என கடந்த ஆண்டு தெரிவித்ததையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் ஹூமாயூன் கபீருக்கு பாஜவுடன் தொடர்பு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

Related Stories: