சண்டிகர்: பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், அமிர்தசரஸ் மாவட்டம், குர்தாஸ்பூர் மாவட்டம் மற்றும் அமிர்தசரஸ் சிறப்பு அதிரடிப்படை ஆகியவை மத்திய முகமைகளுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், வெளிநாட்டில் உள்ள ஒரு நபரால் இயக்கப்பட்டு வந்த ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற பாபர் கல்சா இன்டர்நேஷ்னல் (பிகேஐ) தீவிரவாதக் குழுவை முறியடித்து, இரண்டு தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளன. தீவிரவாதிகளிடம் இருந்து 5 கையெறி குண்டுகள், 2 சிறப்பு டெட்டனேட்டர்கள், டைமர், பேட்டரி, வெடிகுண்டு தயாரிப்புப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றார்.
பஞ்சாபில் 2 தீவிரவாதிகள் கைது
- பஞ்சாப்
- சண்டிகர்
- டிஜிபி
- கவுரவ் யாதவ்
- அமிர்தசரஸ் மாவட்டம்
- குர்தாஸ்பூர் மாவட்டம்
- அமிர்தசர் சிறப்பு நடவடிக்கை படை
- முகவர்
