மேற்கு வங்கத்தை பின்னோக்கி இழுக்கும் கொடுங்கோல் அரசை அகற்ற வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்

ஹல்தியா: மேற்கு வங்கத்தை பின்னோக்கி இழுக்கும் கொடுங்கோல் அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார். மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலையொட்டி கிழக்கு மெதினிப்பூர் மாவட்டம், ஹல்தியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தடுக்கிறது.இப்போது நடக்கும் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, மாநிலத்தின் பெருமையை மீட்டெடுப்பதற்கான தேர்தல்.

நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில், திரிணாமுல் காங்கிரசின் நிர்மாம் சர்க்கார் (கொடுங்கோல் அரசு) வங்காளத்தைப் பின்னோக்கி இழுக்கிறது.விக்சித் வங்கத்தை’ கொண்டுவர, அந்தக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவது அவசியம். 100 ஆண்டுகள் கடந்தாலும்கூட, வங்காள இளைஞர்களுக்கு எதிராக அது செய்த பாவங்களிலிருந்து திரிணாமூல் காங்கிரஸால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. பிரதமரை எதிர்ப்பதால் மாநிலத்திற்கு எந்தப் பயனும் இல்லை; மாறாக, பிரதமரும் முதல்வரும் ஒருமித்துச் செயல்படும்போதுதான் மாநிலம் பயனடையும்.

மம்தா அரசு ஊடுருவலுக்கு வழி வகுத்தது. ஊடுருவல்காரர்கள் பெருகி வரும் நிலையில் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களுக்கு குடி பெயர்கின்றனர். திரிணாமுல் அரசு அச்சத்தை பரப்பி, நீதிக்காக மக்களை நீதிமன்றங்களை நாட நிர்பந்திக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி 6 உத்தரவாதங்களை அளித்துள்ளார். பாஜ ஆட்சி அமைந்ததும், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒவ்வொரு ஊழல் குறித்தும், ஒவ்வொரு முறைகேடு குறித்தும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு அநீதி குறித்தும், ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும் மீண்டும் விசாரிக்கப்படும் என்பது உள்பட 6 உத்தரவாதங்களை அவர் அறிவித்தார்.

* ஆட்சி மாற்றம் நிச்சயம்
அசன்சோலில் நடந்த கூட்டத்தில் மோடி பேசும்போது, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் பாவங்களின் களஞ்சியம் நிரம்பி விட்டதால் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் பங்களிப்பு, 12 % வெறும் 5 % ஆக சரிந்துள்ளது. ஆட்சி மாற்றம் என்பது இப்போது கல்லில் செதுக்கப்பட்டது போல உறுதியாகிவிட்டது. அதை மாநில மக்கள் விரும்புகிறார்கள்.அசன்சோல் நகரம் நிலக்கரி மற்றும் மணல் மாபியாக்களால் ஆளப்படுகிறது என்றார்.

Related Stories: