மகளிர் இட ஒதுக்கீடு மசோதா காங். செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029ம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு கடந்த புதன்கிழமை(ஏப்.8) ஒப்புதல் வழங்கியது. மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல்களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, எல்லை நிர்ணய நடவடிக்கை மற்றும் மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

Related Stories: