ஐபிஎஸ் அதிகாரி பாஜவில் ஐக்கியம்

அகமதாபாத்: குஜராத்தில் மொத்தம் 1,000 இடங்களுக்கு வரும் 26ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், குஜராத் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த எம்.எல்.நினாமா நேற்று முன்தினம் விருப்ப ஓய்வு பெற்றார். 2006ம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் விருப்ப ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் பா.ஜவில் இணைந்தார். இதே போல் ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில உழவர் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராஜூ கர்படா கடந்த பிப்ரவரி 11ம் தேதி ஆம் ஆத்மியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார். இந்நிலையில் நேற்று இருவரும் குஜராத் அமைச்சர் பி.சி.பரண்டா முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

Related Stories: