சட்டீஸ்கரில் சரண் அடைந்த நக்சல்கள் மூலம் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் சரணடைந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி தீவிரவாதத்துடன் போராடி வந்த சட்டீஸ்கர் குறிப்பாக பஸ்தர் பகுதி கடந்த 31ம் தேதி ஆயுதமேந்திய மாவோயிஸ்ட்டுகள் இல்லாத பகுதியாக அரசினால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கான்கர் மாவட்டத்தில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு மற்றும் வனப் போர் கல்லூரியில் நடைபெறும் பயிற்சி திட்டங்களுக்கு உதவுவதற்காக மேம்படுத்தப்பட்ட வெடி சாதனங்களை கையாளுதல், நிறுவுவதில் முன் அனுபவம் உள்ள சரண் அடைந்த நக்சல்களை உள்ளடக்கிய சுமார் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்.

Related Stories: