திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெண்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வந்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சைதாபேகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சைதாபேகம் ‘காவதீன்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு வாட்ஸ்அப் குழு உருவாக்கி 42 இளம்பெண்களை அதில் சேர்த்து, தீவிரவாத பயிற்சி அளித்து வருவது தெரியவந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் உள்ள 40 கணக்குகளில் வீடியோக்களை பதிவேற்றி பயிற்சி அளித்துள்ளார். பின்னர் ஆயுதப்பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. அவரது வாட்ஸ்அப்பில் இருந்து, பயிற்சி மற்றும் ஆள்சேர்ப்பு தொடர்பான ஏராளமான பி.டி.எப். பைல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கைதான சைதாபேகத்தை போலீசார் நேற்றுமுன்தினம் விஜயவாடா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காவலில் எடுத்து, பயங்கரவாத கும்பலுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் 42 பெண்களுக்கு பயிற்சி அளித்த தெலங்கானா பெண் தீவிரவாதி அதிரடி கைது
- ஆந்திரப் பிரதேசம்
- திருமலா
- சைதா பேகம்
- ஹைதராபாத், தெலுங்கானா
- விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்
- பகிரி
- கவாடீன்...
