முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி பழநி தொகுதியில் என்​.​பாண்டி, எம்​.சின்​னதுரை- கந்​தர்​வ​கோட்​டை​ (தனி), ஆர்​.செல்​லசாமி- பத்​ம​நாபபுரம், எல்​.சுந்​தர​ராஜன்- திரு​வொற்​றியூர், டி.லதா- கீழ்​வேளூர் (தனி) தொகு​தியில் போட்​டி​யிடு​வார்​கள் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்.பாண்டி, எம்.சின்னதுரை, ஆர்.செல்லசாமி, எல்.சுந்தரராஜன், டி.லதா ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உடனிருந்தார். இதேபோல, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: