அனைத்து தொகுதி நிர்வாகிகளோடு வரும் 3ம் தேதி மு.க.ஸ்டாலின் காணொலியில் கலந்துரையாடல்: திமுக அறிவிப்பு

சென்னை: சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 3ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளோடு காணொலி மூலம் கலந்துரையாடுகிறார் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளுடன் வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். அப்போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியளவிலும் ஓரிடத்தில் மாவட்ட செயலாளர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், பகுதி நகரம், ஒன்றியம் – வட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கான கேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். காணொலி இணைப்பு தலைமைக்கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: