சினிமா கட்சியை இஸ்லாமியர்கள் புறக்கணிப்பார்கள் தவ்ஹீத் ஜமா அத் தலைவர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் அ.முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில தணிக்கைக் குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான், மாநில செயலாளர்கள் ஹபிபுல்லாஹ், பெரோஸ் மற்றும் தமிழகம், பாண்டிச்சேரி, காரைக்கால், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செயற்குழுவில் மாநில தலைவர் அப்துல் கரீம் பேசுகையில், ‘‘தமிழக முஸ்லிம்கள் பாசிச பாஜவையும் அதனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளையும் படுதோல்வி அடைய செய்வார்கள். சினிமா மோகத்தில் ஓட்டை பெற்று விடலாம் என புதிதாக கட்சி ஆரம்பித்திருப்பவர்களையும் தமிழக இஸ்லாமியர்கள் புறக்கணிப்பார்கள். நடந்து வரும் வளைகுடா போரில் தொடக்கம் முதலே நடுநிலை காக்க தவறிய மோடி அரசை கண்டிக்கிறேன்’’ என்றார்.

Related Stories: