வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு பணிகள் குறித்து எஸ்பி ஆலோசனை

 

ஜெயங்கொண்டம், மார்ச்31:அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிகள் மற்றும் உள்ள பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் குறித்து எஸ் பி போலீசாருக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடிகளில் மற்றும் உளள பகுதிகளில் பணி புரியும் காவலர்களுக்கு அவர்கள் பின்பற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா சாஸ்திரி ஆலோசனை வழங்கினார்.

வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலை தூரத்திற்கு வாகனங்களை நிறுத்துவது, ஒவ்வொரு பூத்திற்கும் நியமிக்கப்பட்ட ஆட்கள் உரியவர்கள் தானா, தேர்தல் காவல் கண்காணிப்பு குழுவினர் காவல்துறையினருக்கு உண்டான அடிப்படை தேவைகள் சாப்பாடு உள்ளிட்டவை உரிய நேரத்திற்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

 

Related Stories: