பெரம்பலூரில் நாளை 57 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்புத்தொழுகை

 

பெரம்பலூர்,மார்ச் 20: பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நாளை 57 பள்ளி வாசல்களில் நடக்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்பு தொழுகை நடத்தப்படும் வாலிகண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசல் தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்.
உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் சிறப்பு பண்டிகையான ரம்ஜான் பண்டிகையையொட்டி, 30 நாட்கள் நடைபெறும் நோன்பு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி நாளை 20ம் தேதிவரை நடைபெறுகிறது. 21ம்தேதி புனித ரம்ஜான் பண்டிகை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 56 பள்ளி வாசல்கள் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்புத் தொழுகை நடத்தப்படும், இந்திய தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள, சமஸ்கான் எனும் ஜாகீர்தாரால் 1723 ம் ஆண்டு கட்டப்பட்டு 303 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வாலிகண்டபுரம் சமஸ்கான் பள்ளிவாசல் உள்பட 57 பள்ளி வாசல்களில் கோலாகலமாகக் கொண்டாடப் படவுள்ளது.

Related Stories: