செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் சுவாமி திருவீதியுலா

பாடாலூர், மார்ச் 27: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமி திருவீதி உலா நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இது பக்தர்களால் பெருமையோடு வடபழனி என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானை மற்றும் தண்டாயுதபாணி ஆகிய சுவாமிகளுக்கு நேற்று இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மலையை சுற்றி சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Related Stories: