அரியலூர் நகராட்சியில் ரூ.18.20 கோடியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள்

அரியலூர், மார்ச் 23: அரியலூர் நகராட்சியில் ரூ.18.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டு பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொமக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.18.20 கோடி மதிப்பீட்டில் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நகராட்சியில் உள்ள அனைத்து பகிர்மான குழாய் மாற்றியமைத்தல், சத்யா நகர் (வார்டு எண்.2 கே.கே. நகர்), மின்நகரில் தலா 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி மற்றும் 7,802 எண்ணிக்கை குடிநீர் வீட்டிணைப்புகளில் 5,680 வீட்டிணைப்பு வழங்கும் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

இத்திட்டம் மூலம் அரியலூர் நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததற்கு பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான சேமிப்பு கிடங்கு கொள்ளளவினை மேம்படுத்தும் விதமாக, அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் 3,000 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

 

Related Stories: