பெரம்பலூரில் உள்ள கேந்திரியா வித்யாலயாவில் முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை

பெரம்பலூர்,மார்ச் 25: பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ கேந்திரியா வித்யாலயாவில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் மேகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான கேந்திரிய வித்யாலயா முதலாம் வகுப்பு சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த 20ம்தேதி தொடங்கியது.

31 மார்ச் 2026-க்குள் 6 வயது நிரம்பியிருக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்கள், ராணுவத்தினர், மாநில அரசு ஊழியர்கள், மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு பிஎம் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் < https://perambalur.kvs.ac.in/ > இணையதளத்தை அல்லது அதிகாரப்பூர்வ கேந்திரியா வித்யாலயா சங்கதன் < https://kvsangathan.nic.in/ > வலைத்தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முதலாம் வகுப்பு சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர்கள் தகுதி ஆவணங்களுடன் வரும் ஏப்ரல் 2ம்தேதிக்குள் https://kvsangathan.nic.in/இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான குழந்தைகளின் பெயர்கள் பள்ளியின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் அல்லது பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் என பள்ளி முதல்வர் மேகநாதன் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: