பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு வியாழன் சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர், மார்ச் 27: பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளி தட்சிணாமூர்த்தி சுவாமி அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலில் நேற்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்படி காலை 11 மணி அளவில் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பழச்சாறு வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மோகன் மற்றும் பெரம்பலூர் அரணாரை, துறைமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர். பூஜைகளை கெளரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

 

 

Related Stories: