திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன் அறிமுக கூட்டம் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. அதிமுக உடனான கூட்டணி கட்சிகள் பாஜ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். கூட்டத்தில், முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி என்னை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்’’ என்று பேசியபடி கதறி அழுதார்.
பின்னர் அனைத்து கூட்டணி கட்சியினர் முன்னிலையிலும் மேடையிலேயே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்று கூறிக்கொண்டே, திடீரென கீழே விழுந்து கும்பிட்டார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், தேர்தல்னு வந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காம இதையெல்லாம் கரெக்டா செஞ்சித்தான் ஆகணும். தேர்தல் நடிப்புடா சாமின்னு கமண்ட் அடிச்சிக்கிட்டாங்க. அதோட, அனைத்து கட்சிக்காரங்களுக்கும், வடை, பாயாசத்துடன் சப்பாடு போட்டிருக்காங்க.
