எல்லாரும் பாஜவில் சேருவார்கள்; எடப்பாடி பதவி காலியாகும்: அதிமுக கட்சியே இருக்காது: அடித்து சொல்லும் நிர்மல்குமார்

 

தவெக திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் நேற்றிரவு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக என்ற கட்சி 2026ல் நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு இருக்காது. அதிமுகவிற்கான ஓட்டுப்பதிவு என்பது, பாஜவிற்கானது என்பதை மறுக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கப் போவதில்லை. அவர்கள் பாஜ கட்டுப்பாட்டில் இருப்பதால், தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது.

தற்போது அதிலிருக்கும் தொண்டர்கள் அனைவரும் பாஜவில் சேர்க்கப்படுவார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்னையில் பாஜ திட்டமிட்டே அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது. அங்கு ஏற்கனவே இருந்த நிலையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த அமைதிக்கு எதிரான செயல்பாடுகளை பாஜ மேற்கொள்கிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: