தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் மனைவியும், ராஜபாளையம் தொகுதி வேட்பாளருமான பிரிசில்லா பாண்டியன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். நடிகர் விஜய் கட்சிக்கு இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறுவது ஒரு பிம்பம் தான். உண்மையில் அப்படி எதுவும் பெரிய ஆதரவு இல்லை.
ராஜபாளையம் தொகுதியை பொறுத்தவரை, திமுகவா-தேசிய ஜனநாயக கூட்டணியா என்று தான் போட்டி நிலவுகிறது. திமுகவை எதிரியாக நினைப்பது விஜய்யின் கட்சி கொள்கை. ஆனால் நாங்கள் விஜய்யை ஒரு போட்டியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. வட தமிழ்நாட்டில் வேண்டுமானால், விஜய்க்கு ஆதரவு இருக்கலாம். ஆனால், தென் தமிழ்நாட்டில் அப்படி எதுவும், பெரிய அளவில் விஜய்க்கு ஆதரவு இல்லை. தென் தமிழ்நாட்டில், விஜய் எங்களுடன் போட்டியிலேயே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
