5 தொகுதிகளுக்கு முதற்கட்ட பட்டியல் வெளியீடு; ஒரு வழியா வேட்பாளர்களை அறிவிச்சுட்டாரு ராமதாஸ்: மூன்றில் அன்புமணியுடன் நேரடி மோதல்

 

பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்த நிலையில், ராமதாஸ் தலைமையில் ஒரு அணியினரும், அன்புமணி தரப்பில் ஒரு அணியினரும் களத்தில் உள்ளனர். அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடுகிறார். ராமதாஸ் தலைமையிலான பாமகவை யாரும் சேர்க்காததால், அவர் தனித்து விடப்பட்டார். கூட்டணிக்கான வண்டி பக்கத்தில் வந்துவிட்டது என சொன்ன ராமதாஸ், எல்லாரும் கூட்டணியை உறுதி செய்த பிறகும், மவுனமாக இருந்தார். இதனால், 2ம் கட்ட தலைவர்கள் ராமதாஸ் மீது அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், தனக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்த அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய சசிகலா, ராமதாசை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார். அவரும், தனது மகனை வீழ்த்த சசிகலாவுடனான கூட்டணிக்கு சம்மதித்தார். தென்மாவட்டங்களில் சசிகலா வேட்பாளர்களை நிறுத்துவதும், வடமாவட்டங்களில் ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்துவதும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு ராமதாஸின் தீவிர ஆதரவாளரான சேலம் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சசிகலா தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதன்படி, 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளார். ஆனால், சசிகலாவுடன் கூட்டணியில் உள்ள ராமதாஸ், வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், ராமதாஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில், ‘‘சேலம் மேற்கு தொகுதி, மாநில இணை பொதுச்செயலாளர் அருள், வந்தவாசி தொகுதியில் ெபாதுச்செயலாளர் முரளி சங்கர், கும்பகோணம் தொகுதியில், ஆடுதுறை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின், விருத்தாசலம் தொகுதியில், மாவட்டச் செயலாளர் சுரேஷ், மயிலாடுதுறை தொகுதி, மாவட்ட செயலாளர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதில் 3 வேட்பாளர்கள் அன்புமணி வேட்பாளர்களுடன் மோதுகின்றனர். சேலம் மேற்கு பாமக (அன்புமணி) வேட்பாளர் மு.கார்த்தியை எதிர்த்து சேலம் அருள் எம்எல்ஏவும், விருத்தாசலத்தில் தமிழரசி ஆதிமுலத்தை எதிர்த்து மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் போட்டியிடுகின்றனர்.

Related Stories: