தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசாரோடு இணைந்து பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

புதுக்கோட்டை, மார்ச் 27: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து செயல்பட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையோடு இணைந்து செயல்பட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்துள்ள 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், தங்களது ஆதார் அட்டை, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் படைப்பணிச் சான்றுடன் தங்களது விருப்பத்தினை புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வருகை தந்து பதிவு செய்துகொள்ளலாம், அல்லது 04322-236593 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

 

Related Stories: