தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரி மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தியையொட்டி வரும் 30ம் தேதி இரவு 10 மணி முதல் 1ம் தேதி காலை 12 மணி வரை அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்டத்தில் வரும் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தியையொட்டி, அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் மூட வேண்டும். 30ம் தேதி இரவு 10 மணி முதல் வரும் 1ம் தேதி காலை 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க வேண்டும். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
