இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம்

போச்சம்பள்ளி, மார்ச் 28: போச்சம்பள்ளியில் இருந்து சந்தூர் கூட்ரோடு வழியாக காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, பர்கூர், திருப்பத்தூர், செல்லும் பிரதான சாலையில் உள்ள கானகுட்டை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக காவேரிப்பட்டணம்-வேலம்பட்டி சாலையில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். கானகுட்டை பகுதி ஏரியை ஒட்டியுள்ளதால், விவசாயிகள் நெல் மற்றும் பல்வேறு பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்தூர் கூட்ரோடு பகுதியில் காவேரிப்பட்டணம் மெயின் சாலையில் உள்ள கானகுட்டை பகுதியில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன், கோழி, கழிவுகள், ஓட்டல் கடைகளில் சேகரமாகும் கழிவுகளை மூட்டைகளாக கட்டி, இரவு நேரத்தில் டூவிலர்களில் எடுத்து வந்து கொட்டி செல்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு அபாயமும் நிலவி வருகிறது. அவ்வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். எனவே, இப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்ட தடை விதித்து, கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: