காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 28: கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகு தலைமை வகித்தார். நகர தலைவர் லலித் ஆண்டனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் எந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.

வேறு மாவட்டமோ அல்லது வேறு மாநிலத்தில் இருந்தும் வேட்பாளர்களை அறிவிக்கக்கூடாது. மண்ணின் மைந்தர்களை வெற்றி பெறச் செய்து, ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுசெயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், ராஜா குமாரவேல், ஜேசுதுரைராஜ், நாராயணமூர்த்தி, காசிலிங்கம், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், நஞ்சுண்டன், தனஞ்செயன், நாராயணமூர்த்தி, சித்திக், அயோத்தி, ஸ்ரீராம், யுவராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: