வேலூர், மார்ச்.28: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காட்பாடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி. இவர் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள குளக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது காட்பாடி அடுத்த சேனூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் அரவிந்தன் (25), என்பவர் சிறுமியை மிரட்டி புதருக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் சரமாரியாக அரவிந்தனை தாக்கி காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
