குன்றத்தூர், மார்ச் 28: பெரம்பூர் பி.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (38). சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். பெரம்பூர் நெல்வயல் சாலையில் இருவர் மது அருந்தினர். இதனைக் கண்ட வசந்தகுமார் இருவரையும் தட்டிக் கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு வசந்தகுமாரை தாக்கினர். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பெரம்பூர் பி.பி சாலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் தலைமை காவலர் வசந்தகுமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் பாஜவில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதி இளைஞரணி செயலாளராக உள்ளார்.
தலைமை காவலரை தாக்கிய பாஜ இளைஞரணி செயலாளர் கைது
- பாஜக
- குன்றத்தூர்
- வசந்தகுமார்
- பெரம்பூர் பிபி சாலை
- சென்னை காவல் ஆணையர் அலுவலகம்
- பெரம்பூர் நெல்வயல் சாலை.…
