ரூ.54.34 லட்சம் உண்டியல் காணிக்கை படவேடு ரேணுகாம்பாள் கோயிலில்

கண்ணமங்கலம், மார்ச் 27: திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர் கோ.சண்முகசுந்தரம் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வில் செயல் அலுவலர் பழனிச்சாமி, போளூர் சரக ஆய்வாளர் சத்தியா, அறங்காவலர் குழு தலைவர் விஜயாசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அறங்காவலர்கள் மோகன்தாஸ், சுதாகர், நீதிமன்னன், கண்காணிப்பாளர் ஆறுமுகம், முன்னாள் அறங்காவலர் ஆர்.வி.சேகர், தன்னார்வலர்கள், திருக்கோயில் எழுத்தாளர்கள் முனியன், மோகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 13.11.25 அன்று கடைசியாக உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் ரொக்கப் பணம் ரூ.54,34,195, தங்கம் 415 கிராம், வெள்ளி 1,116 கிராம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. எண்ணி முடிக்கப்பட்ட காணிக்கை தொகையும், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் உடனடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இத்தொகை கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: