‘வாக்களிப்பது என் கடமை’ அலுவலர்கள் உறுதிமொழி போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்

சேத்துப்பட்டு, மார்ச் 25: போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ‘வாக்களிப்பது என் கடமை’ என அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தேர்தல் அதிகாரிகள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, ‘வாக்களிப்பது என் கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பேன்’ உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், சேத்துப்பட்டு வட்டாட்சியர் தமிழ்மணி, துணை வட்டாட்சியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்தல் பணி பயிற்சி நடத்த அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் மற்றும் வட்டாட்சியர் தமிழ்மணி ஆகியோர் பள்ளியை பார்வையிட்டு, தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தனர்.

Related Stories: