மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான

திருவண்ணாமலை, மார்ச் 24: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உளளது. அதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதற்கட்ட சரிபார்ப்பு செய்து, தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் ராமகிருஷ்ணாசிந்தூரி ஆகியோர் முன்னிலையில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி குலுக்கல் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது. அதன்படி, தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விபரம்:
தொகுதி பூத் பேலட்யூனிட் கன்ட்ரோல் யூனிட் விவிபேட்
செங்கம்(தனி) 341 409 409 443
திருவண்ணாமலை 318 382 382 413
கீழ்பென்னாத்தூர் 307 368 368 399
கலசப்பாக்கம் 301 361 361 391
போளூர் 299 359 359 389
ஆரணி 323 388 388 420
செய்யாறு 334 401 401 434
வந்தவாசி (தனி) 293 352 352 381
மொத்தம் 2516 3019 3019 3271

Related Stories: