பைக்கில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.19 லட்சம் பறிமுதல் ஆரணி அருகே

ஆரணி, மார்ச் 21: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தில் உள்ள ஆரணி- தச்சூர் செல்லும் சாலையில் உள்ள ஈபி ஆபிஸ் அருகில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.19 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, விசாரணையில், சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(40), பில்டிங் காண்ட்ராக்டர், இவர் ஆரணி அடுத்த தச்சூரில் கிராமத்தில் மனை வாங்கி வீடு கட்டி வரும் இடத்தில் நேற்று போர்வெல் அமைத்துள்ளார். அப்போது, போர்வெல் அமைத்தற்கு பணம் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணத்தை எடுத்து கொண்டு சென்னைக்கு பைக்கில் சென்றது தெரியவந்தது. மேலும், சிவலிங்கம் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அதிகாரி திருநாவுக்கரசு ஆரணி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரேசனிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Related Stories: