ரூ.90 கோடியில் உயர்மட்ட பாலம், 4 வழிச்சாலை முதல்வர் காணொலியில் திறந்தார் செய்யாறு எம்எல்ஏ பங்கேற்பு ஆற்காடு- திண்டிவனம் சாலையில்

செய்யாறு, மார்ச் 14: செய்யாறில் வளர்ச்சி பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார். இதில் எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தார்.
செய்யாறில் உள்ள ஆற்காடு- திண்டிவனம் சாலையில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் 7.40 கி.மீ தூரம் உள்ள இரு வழிப்பாதை, 4 வழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் 15 சிறுபாலங்கள் மற்றும் 2 சிறு பாலங்கள் அகலப்படுத்தும் பணி மற்றும் செய்யாறு ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்த காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதே வேளையில் செய்யாறில் நடந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று மக்களின் பயன்பாட்டிற்காக மேம்பாலத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சப் கலெக்டர் அம்பிகா ஜெயின், நெடுஞ்சாலைத்துறை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் கே.முரளி, செய்யாறு கோட்ட பொறியாளர் வி.சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் எஸ்.சுரேஷ், உதவி பொறியாளர் பி.கோபி, முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் க.லோகநாதன், நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், ஒன்றிய செயலாளர்கள் ஆ.ஞானவேல், ஜே.சி.கே.சீனிவாசன், எம். தினகரன், திராவிட முருகன், ரவிக்குமார், மாமண்டூர் டி ராஜி, திலகவதி ராஜ்குமார், ஜி.அசோக், ராம்ரவி, வி.கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: