ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.69 ஆயிரம் பறிமுதல் போளூர் அருகே பறக்கும் படையினர் அதிரடி

சேத்துப்பட்டு, மார்ச் 17: தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுன்தினம் முதல் அமலில் வந்தது. இதையொட்டி போளூர் அருகே கொழாவூர் கிராமத்தில் பறக்கும் படை அதிகாரி ஜெயசித்ரா, காவலர்கள் மணிகண்டன், கவுரி தலைமையில் போளூர்- சேத்துப்பட்டு சாலையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வேலூர் மாவட்டம் கத்தாயம் பட்டு கிராமத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்ததில் ஆவணம் இன்றிகொண்டு சென்ற ரூ.69 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. உடன அந்த பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் அலுவலர் சதீஷ்குமார் இடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார்நிலை கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் மெடையூர் பகுதியில் முனீஸ்வரன் சிலை வாங்குவதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது. ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் இடம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: